

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட சீரிசின் மூன்றாம் பாகம் 'பொலிமேரா 3' விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் வீராவி எனும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வம்சி நந்திபாடி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் பரத் நரங்குடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ‘பொலிமேரா’ திரை அனுபவத்தை இன்னும் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரசிகர்களுக்கு வழங்க உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வெளியான ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) நிறுவனங்கள் சார்பில் வம்சி நந்திபாடி மற்றும் பரத் நரங் தயாரிக்கும் 'பொலிமேரா 3' திரைப்படத்தை டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய கிருஷ்ண பிரசாத் இசையமைக்கிறார்.