சௌகார் ஜானகி மறைவு - டி.ராஜேந்தர் இரங்கல்!

சௌகார் ஜானகியின் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
சௌகார் ஜானகி மறைவு - டி.ராஜேந்தர் இரங்கல்!
Published on: 

நடிகை சௌகார் ஜானகியின் மறைவிற்கு இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்.,

“பழம்பெரும் நடிகை, பண்பட்ட நடிகை, பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலித்த நடிகை, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற நடிகை, தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாயகி, குணச்சித்திர நாயகி, திரைச்சித்திர நாயகி சௌகார் ஜானகி அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி, கலை உலகத்திற்கு பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடக்கூடிய கலை உலகத்திற்கும், தென்னிந்திய ரசிகப் பெருமக்களுக்கும், அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com