Once More | ஒன்ஸ் மோர் படத்தின் அசத்தல் அப்டேட்

ஒன்ஸ் மோர் படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியீடு.
Once More | ஒன்ஸ் மோர் படத்தின் அசத்தல் அப்டேட்
Published on

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இவர் இதற்கு முன் ஹ்ருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்ஸ் மோர் படம் கோடையில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் சோனா ஒலிக்கல் "இந்தரா" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை படக்குழு அறிவித்து இருக்கிறது. இது குறித்து போஸ்டர் மற்றும் இந்திரா கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் "தி அதர் வொர்ல்டு" டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஆறாவது பாடல் வருகிற வெள்ளிக்கிழமை மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com