

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என சிலர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் உள்ளூர் மக்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு வெளிநாட்டு பயணிகளும் சிக்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என சிலர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உருக்கமாகவும் சில விஷயங்களை பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கை என்பது பணத்தைத் துரத்துவதோ, புகழைத் தேடுவதோ அல்லது மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக அலைவதோ அல்ல. ஒரே ஒரு நொடியில் இவை அனைத்துமே நம்மை விட்டு போய்விடும். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுங்கள். உங்கள் வேகத்தை குறைத்து, உங்களுக்குள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நேசித்து மதியுங்கள். உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்” என்று நிவேதா பெத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.