Nooru Saami | மீண்டும் இணைந்த 'பிச்சைக்காரன்' கூட்டணி... 'நூறு சாமி' படத்தின் புதிய அப்டேட்

Noorusaami
Noorusaami
Published on
Summary

நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையவில்லை. இவர்களின் கூட்டணி மீண்டும் இணையுமா? என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com