எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்". தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
எமக்கு  தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்". இப்படத்தை T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

படம் வரும் நவம்பர் 15 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய காரணத்தினால் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கபட்டது.

தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com