'டாக்ஸிக்' படத்துக்கு புது சிக்கல்

'டாக்ஸிக்' ரிலீசுக்கு முன்பு படத்தின் ஓ.டி.டி உரிமத்துக்கு ரூ.150 கோடி தர ஓ.டி.டி. நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாம்.
டாக்ஸிக் பட காட்சி
டாக்ஸிக் பட காட்சி
Published on
Summary

'டாக்ஸிக்' படத்தின் விமர்சனங்களால் 'டாக்ஸிக்' படத்துக்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை மட்டுமே கேட்கிறார்களாம். இதுபடக்குழுவுக்கு மேலும் சோதனையை உண்டாக்கி விட்டது.

எதிர்மறையான விமர்சனங்கள்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்த டாக்ஸிக் படம் சமீபத்தில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

படத்தில் வன்முறையும், ஆபாச காட்சிகளும் அதிகம் இருந்ததால் எதிர்பார்த்த வசூலும் படத்துக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே தியேட்டர்களில் படம் மிகக்குறைவான வசூலைப் பெற்று நஷ்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் 'டாக்ஸிக்' படத்துக்கு புது சிக்கல் வந்திருக்கிறது.

'டாக்ஸிக்' ரிலீசுக்கு முன்பு படத்தின் ஓ.டி.டி உரிமத்துக்கு ரூ.150 கோடி தர ஓ.டி.டி. நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால் ரூ.200 கோடி வேண்டும் என தயாரிப்பாளர் உறுதியாக இருந்தாராம். தற்போது படத்தின் விமர்சனங்களால் 'டாக்ஸிக்' படத்துக்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை மட்டுமே கேட்கிறார்களாம். இதுபடக்குழுவுக்கு மேலும் சோதனையை உண்டாக்கி விட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com