புது போஸ்டர் வெளியீடு - வெயிட்டிங்கில் வெறி ஏத்திய காந்தாரா சாப்டர் 1

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' உருவாகி வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புது போஸ்டர் வெளியீடு - வெயிட்டிங்கில் வெறி ஏத்திய காந்தாரா சாப்டர் 1
Published on

கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' உருவாகி வருகிறது. முதல் படமான காந்தாரா கதைக்கு முற்கதையாக ப்ரீகுவல் படமாக இரண்டாம் பாகம் அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. திரைப்படம் அடுத்தாண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com