ஐரா இயக்குனருடன் மீண்டும் இணையும் நயன்தாரா?

ஐரா படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார். எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார்.
ஐரா இயக்குனருடன் மீண்டும் இணையும் நயன்தாரா?
Published on

2019 ஆம் ஆண்டு நயன் தாரா மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஐரா திரைப்படம், இப்படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார். இப்படத்தில் நயன் தாரா இரு வேடங்களில் நடித்து இருதார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து , பிளட் மனி மற்றும் புர்கா திரைப்படத்தை இயக்கினார்.

தற்பொழுது எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார். சர்ஜூன் இயக்கும் இப்படத்திற்கு பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் கதை மற்றும் திரைக்கதை எழுதவுள்ளார்.

இப்படத்தில் நயன் தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com