இறுதிக்கட்டத்தில் ‘நந்தன் 2’ படப்பிடிப்பு: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘நந்தன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இரா. சரவணன் உருவாக்கும் அடுத்த படைப்பு என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நந்தன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நந்தன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on
Summary

‘நந்தன் 2’ படத்திலும் சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்சனையை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார். ‘நந்தன்’ படத்தை விட இன்னும் அழுத்தமான படைப்பாக சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.

இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் முதல் டைட்டில் லுக் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர், வழக்கமான திரைப்பட போஸ்டர்களில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. முழுவதும் கருப்பு-வெள்ளை பின்னணியில், ஒரு சிறுமியின் கையில் தண்ணீர் ஏந்திப் பிடித்திருக்கும் உலோகப் பாத்திரத்தின் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் மற்றும் படக்குழுவினர் இடம்பெறுவது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிபலிப்பின் மையத்தில் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ள ‘நந்தன் 2’ என்ற தலைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

‘நந்தன் 2’ படத்திலும் சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்சனையை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார். ‘நந்தன்’ படத்தை விட இன்னும் அழுத்தமான படைப்பாக சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது ‘நந்தன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘நந்தன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இரா. சரவணன் உருவாக்கும் அடுத்த படைப்பு என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இரா. சரவணனின் இயக்கமும், நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் இணையும் இந்தப் புதிய கூட்டணி, படத்தின் கதையையும் அதன் உணர்வையும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் ‘நந்தன் 2’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் குறித்த தகவல்கள் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான முழுமையான விவரங்கள், அடுத்தடுத்த அப்டேட்களில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com