நகுலின் அடுத்த படம் டிரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியீடு

வாஸ்கோடகாமா படத்திற்கு அருன் எஸ்வி இசையமைத்துள்ளார்.இந்த படத்திற்கு ஏழுமலை ஆதிகேசவன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
நகுலின் அடுத்த படம் டிரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியீடு
Published on

தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

எனினும், இடையில் சிலகாம் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நகுல் நடித்துள்ள புதிய படம் வாஸ்கோடகாமா என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது.

ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக புது போஸ்டரும் வெளியிடப்பட்டு உள்ளது.

அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது ஆடியோ, டிரைலர் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com