நாட்டின் அமைதியை குலைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.. வாஸ்கோடகாமா டிரைலர் வெளியீடு

வாஸ்கோடகாமா படத்தை ஆர்ஜிகே இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை ஏழுமலை ஆதிகேசவன் மேற்கொண்டுள்ளார்.
நாட்டின் அமைதியை குலைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.. வாஸ்கோடகாமா டிரைலர் வெளியீடு
Published on

தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கி, விரைவில் வெளயியாக இருக்கும் புதிய படம் வாஸ்கோடகாமா. ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தின் சென்சார் விவரங்களும் வெளியாகி உள்ளது. வாஸ்கோடமாகா திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கி உள்ளது.

அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களின் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com