

1986ல் ‘விக்ரம்’ மூலம் அறிமுகமான நாகார்ஜுனா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சாதனையை எட்டுகிறார். அவரது 100வது படம் ‘கிங் 100’ என பெயரிடப்பட்டு, ரா. கார்த்திக் இயக்கத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டிசம்பர் 24 அன்று வெளியாகிறது. இதில் நாகார்ஜுனா இரட்டை வேடத்தில், அசோக் செல்வன் வில்லனாக, தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நாகார்ஜுனா கடந்த 1986-ல் ‘விக்ரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் இந்தியில் வெளியான ‘ஹீரோ’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் தனது முத்திரையைப் பதித்து தெலுங்கு சினிமாவின் சிறந்த நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டார். தெலுங்கில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகார்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையை கொண்டுள்ளனர்.
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ‘கிங் 100’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் மாதம் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகார்ஜுனாவின் 100-வது படமான இப்படத்தில் அசோக் செல்வன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிகை தபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.