நாகார்ஜுனாவின் “செல்போன் பயம்”

ஒரு பிரபலமாக இருப்பதால் அனைத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
நாகார்ஜுனா
நாகார்ஜுனா
Published on

என் செல்போனை யாராவது ஹேக் செய்து விடுவார்களோ என்று எப்போதும் எனக்கு பயம் உண்டு என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகர் நாகார்ஜுனா ஐதராபாத்தில் நடந்த சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கையாக தான் இருப்பது குறித்து பேசியதாவது:-

என் செல்போனை யாராவது ஹேக் செய்து விடுவார்களோ என்று எப்போதும் எனக்கு பயம் உண்டு. அதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை எனது ‘பாஸ்வேர்டு’ நம்பரை மாற்றி விடுவேன். இது மட்டுமின்றி வீட்டில் உள்ள வைபை இணைப்பு பாஸ்வேர்டையும் மாற்றி விடுவேன்.

அதையும் கூட ஹேக்செய்து விடுவார்கள். இது மட்டும் இன்றி செல்போனில் எந்த புகைப்படமும் நான் எடுப்பதில்லை. ஒரு பிரபலமாக இருப்பதால் அனைத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அதிகாரி போல் ஒருவர் என் செல்போனில் அழைத்தார். வழக்கமாக என் வங்கியின் தொடர்பு மேலாளர் தான் அழைப்பார். ஆனால் இது வேறு விதமான அழைப்பாக இருந்தது. அவரோ அவரது விஷயத்தை சாதிப்பதில் உறுதியாக திறமையோடு பேசிக் கொண்டி ருந்தார். எவ்வளவு பேசியும் நான் சம்மதிக்காததால் அவர் புத்திசாலி என்று கூறிவிட்டு வைத்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com