குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகர்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகர்ஜுனா
Published on

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அப்போது தனுஷ் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. தற்பொழுது படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் நடிகர் நாகர்ஜுனா இதனை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com