Mr.X படத்தின் `ஹைய்யோடி' பாடல் வெளியானது

ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Mr.X படத்தின் `ஹைய்யோடி' பாடல் வெளியானது
Published on

F.I.R படத்தை தொடர்ந்து ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அதுல்யா ரவி, ரைஸா வில்சன், அனாகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிஸ்டர் எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஹையோடி பாடல் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலை கிருத்திகா நெல்சன் வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார். பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com