இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள 'லவ் 3.ஓ' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 Monkey Minds
Published on: 
Summary

அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: 'லவ் 3. ஓ' (Love 3. O ) திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீர் மல்க பேசினார்.

இன்ஸ்டாகிராம் உலகத்தில் ரீல்ஸ் மூலம் பிரபலமடைந்த ஆர்னிகா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு மற்றும் இயக்கம் எனப் பல பொறுப்புகளை ஏற்று நாயகியாகவும் களமிறங்கியுள்ள படம் 'லவ் 3.ஓ' . முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பமும் ஏஐ (AI) தொழில்நுட்பமும் மனிதர்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 90-களில் காதல் எப்படி இருந்தது, 2கே கிட்ஸ் காதலை எப்படி எதிர்கொண்டார்கள், எதிர்காலத்தில் காதல் எந்த மாதிரியான பரிமாணத்தை எட்டும் என்பதை இப்படம் பேசுகிறது. குறிப்பாக, ஒரு மனிதன் ஏஐ பெண் மீது கொள்ளும் காதலும், கயிலாயத்திலிருந்து இறங்கிவரும் சிவன் அதற்குச் சொல்லும் தீர்வும் தான் இப்படத்தின் முக்கியக் கதையாகும்.

படக்குழுவினரின் பங்களிப்பு

மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் பிரபலங்களான கோயம்புத்தூர் மாப்ள மற்றும் கே என் ஸ்மைலி கார்த்திகேயன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வேதை மகேஷ் ஒளிப்பதிவு செய்ய, வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் இயக்குநர் பேரரசு, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர்.

இயக்குநர் ஆர்னிகா பேச்சு

விழாவில் பேசிய அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீருடன் தனது கடந்த கால போராட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். தான் வாய்ப்புத் தேடி அலைந்த காலகட்டத்தில் சந்தித்த நிராகரிப்புகளையும், அவமானங்களையும் நினைவு கூர்ந்த அவர், அன்று தனக்கு வாய்ப்பு மறுக்கப்படாதிருந்தால் தான் இன்று இவ்வளவு பொறுப்புகளுடன் இயக்குநராகவும் நாயகியாகவும் வளர்ந்திருக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், தனக்கு வாய்ப்பு தராதவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றும் உருக்கமாகப் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com