திரிஷ்யம் 3 திரைப்படத்தை குறித்து மோகன்லால் கொடுத்த அப்டேட்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம்.மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ்.
திரிஷ்யம் 3 திரைப்படத்தை குறித்து மோகன்லால் கொடுத்த அப்டேட்
Published on

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன  ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் திரிஷ்யம் 3 திரைப்படத்தை குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com