'காந்தாரா 2' படத்தில் இணையும் மோகன்லால்? அதுவும் இந்த கேரக்டரா?

'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் வெளியாகி வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சந்தித்தார்.
'காந்தாரா  2' படத்தில் இணையும் மோகன்லால்? அதுவும் இந்த கேரக்டரா?
Published on

கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. முதல் படமான காந்தரா கதைக்கு முற்கதையாக ப்ரீகுவல் படமாக இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி மலையாள ஹீரோ மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அதிலும் குறிப்பாக கதைப்படி ரிஷப் செட்டியின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து படக்குழு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சென்று சந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com