ஃபெங்கல் புயல் காரணமாக 'மிஸ் யூ' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் சித்தார்த் நடித்துள்ளார்.மிஸ் யூதிரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஃபெங்கல் புயல் காரணமாக 'மிஸ் யூ' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
Published on

கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாக 'மிஸ் யூ' திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் 'மிஸ் யூ' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com