4 நாட்களில் ரூ.50 கோடி வசூலைத் தாண்டிய ‘மீசைய முருக்கு 2’!

செப்.25ம் தேதி படம் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
4 நாட்களில் ரூ.50 கோடி வசூலைத் தாண்டிய ‘மீசைய முருக்கு 2’!
Published on: 

மீசைய முருக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இசையமைப்பாளரும், பாடகருமான ஹிப்ஹாப் ஆதி. அப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘மீசைய முருக்கு 2’ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

செ.25ம் தேதி வெளியான இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.51.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

ஆதியின் இயக்கம், இசை, பாடலில் உருவாகியுள்ள இப்படத்தில் கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான், நாசர் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com