இசை சேவையில் 50 ஆண்டுகள் நிறைவு - ஞானி இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் கௌரவம்!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்த அஞ்சல்தலை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இசை சேவையில் 50 ஆண்டுகள் நிறைவு - ஞானி இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் கௌரவம்!
Published on

இசைஞானி இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அஞ்சல்தலையில் இசைஞானி இளையராஜாவின் உருவப்படமும், அவரது விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இதற்காக ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் என்வர் எர்டோகன் எம்.பி க்கும், விக்டோரியன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் “தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்படுவது உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்வாகும்.

அத்துடன், எனது இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்றவர்களுக்கும், என்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்களுக்கும், எனது இசைப் படைப்புகளை அன்புடன் ஏற்றுக்கொண்ட பல தலைமுறை ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

என இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா.

இளையராஜாவின் பயணம்

1976-ல் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இந்த ஆண்டோடு திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

தனது திரைப்பயணத்தில் பல்வேறு மொழிகளில் பணியாற்றியுள்ள இளையராஜா 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com