வெளியீட்டிற்கு தயாரான மம்மூட்டியின் `பசூக்கா'

மம்மூட்டி `பசூக்கா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வெளியீட்டிற்கு தயாரான மம்மூட்டியின் `பசூக்கா'
Published on: 

கடைசியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி `பசூக்கா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் படக்குழு படத்தின் ஃபைனல் மிக்ஸிங் மற்றும் சவுண்ட் மாஸ்டரிங் செய்து முடித்துள்ளனர். திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாவதற்கு தயாராகவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com