தற்காப்பு கலைகளை கற்று பக்கா ஹீரோவாக ரெடியாகும் லோகேஷ்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
தற்காப்பு கலைகளை கற்று பக்கா ஹீரோவாக ரெடியாகும் லோகேஷ்
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை ராக்கி, சாணி காகிதம் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இதற்காக தற்போது லோகேஷ் தற்காப்பு கலைகளை கற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூலி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கைதி 2 மற்றும் அமீர் கான் நடிப்பில் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் நடிப்பு மற்றும் இயக்கத்தை ஒருசேர செய்ய இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

X

Maalai Malar
www.maalaimalar.com