சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு. மாணிக்கம்'.. வீடியோ பாடலை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

பாரதிராஜா, நாசர், தம்பிராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் கவனத்தை ஈரத்தது
சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு. மாணிக்கம்'.. வீடியோ  பாடலை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்
Published on

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளன.

பரபர காட்சிகளை கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரின் முடிவில் இடம்பெற்ற தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் கவனத்தை ஈரத்தது. படத்தின் இசைக்கோர்வை வீடியோவும் வெளியானது.

படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதை படக்குழு அறிவித்தது. ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா? என்பதை மையமிட்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'பொம்மக்கா' வீடியோ பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com