நாளை முதல் 'லாக்டவுன்' - டீசர் அப்டேட்

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன்.தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
நாளை முதல் 'லாக்டவுன்' - டீசர் அப்டேட்
Published on

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.

கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.

படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் நாளை 11 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் இம்மாதம் வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com