வைரலாகும் எல்.ஐ.கே. படத்தின் தீபாவளி போஸ்டர்.. இது அந்த மாதிரியே இருக்கே!

எல்ஐகே படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். எல்ஐகே படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வைரலாகும் எல்.ஐ.கே. படத்தின் தீபாவளி போஸ்டர்.. இது அந்த மாதிரியே இருக்கே!
Published on

உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொது மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடினர். தீபாவளி பண்டிகையை ஒட்டி லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே.) படக்குழு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதற்காக படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com