3rd Single | LIK படத்தின் அடாவடி பாடல் அப்டேட்

LIK படத்தின் 3 ஆவது பாடலான அடாவடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
lik
lik
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து படம் வெளியாவது குறித்த அறிவிப்புகள் வெளியானாலும் படம் வெளியாகவில்லை.

கடைசியாக 'LIK' படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், LIK படத்தின் 3 ஆவது பாடலான அடாவடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com