லானே! தங்கலானே!! றானே! வருகிறானே - தங்கலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
லானே! தங்கலானே!! றானே! வருகிறானே - தங்கலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

படத்தின் வெளியீட்டு தேதி குறுத்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூரவமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com