லாந்தர் படத்தின் டிரைலர் வௌியீடு

திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார்.லாந்தர் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியானது.
லாந்தர் படத்தின் டிரைலர் வௌியீடு
Published on

'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'லாந்தர்'.

ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார்.

கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

லாந்தர் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com