குபேரா படத்தின் "போய்வா நண்பா" பாடலின் ப்ரோமோ வெளியானது

தனுஷின் 51ஆவது படம் இதுவாகும். இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.பாடலை விவேகா எழுத துனுஷ் சொந்த குரலில் பாடியுள்ளார்.
குபேரா படத்தின் "போய்வா நண்பா" பாடலின் ப்ரோமோ வெளியானது
Published on

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், முதல் பாடல் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த பாடலுக்கான ப்ரோமோ இன்று வெளியடப்பட்டுள்ளது. போய்வா நண்பா..! எனத் தொடங்கும் இந்த பாடலை விவேகா எழுத, தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com