2025 ஆம் ஆண்டில் அதிகம் புக் செய்யப்பட்ட திரைப்பட பட்டியலில் குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் அதிகம் புக் செய்யப்பட்ட திரைப்பட பட்டியலில்  குபேரா
Published on

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது. இதுவரை புக் மை ஷோ செயலியில் மட்டும் 3 லட்சம் 28 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யபட்டுள்ளது. 2025 ஆம் அதிகமகாக புக் செய்யப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா குபேரா படத்தின் BTS புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com