"குபேரா" படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமா நாளை வெளியீடு

தனுஷின் 51ஆவது படம் இதுவாகும். இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, நாகர்ஜுனா முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"குபேரா" படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமா நாளை வெளியீடு
Published on

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் வரும் 20ஆம் தேதி வெளியாகும் எனவும், இந்த பாடலுக்கான ப்ரோமோ நாளை வெளியாக உள்ளதாகவும்  அறிவித்துள்ளது. இப்பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com