காதலை உறுதிபடுத்திய குஷி கபூர்

குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.
காதலை உறுதிபடுத்திய குஷி கபூர்
Published on: 

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இளைய மகள் குஷி கபூர். இவரும் இந்தி திரை உலகில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார்.

குஷி கபூரும், நடிகர் வேதாங் ரெய்னாவும் 'ஆர்ச்சிஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் உருவாகி காதலித்து வருவதாகவும், பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

இந்நிலையில் குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் நெக்லசில் 'வி' என்ற எழுத்தும், 'கே' என்ற எழுத்தும் இரண்டுக்கும் நடுவில் 'லவ்' சிம்பிளும் உள்ளது.

இதை அடுத்து குஷி கபூர் தனது காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com