காலங்கள் மாறும்...கனவுகள் பலிக்கும்.. ப்ளடி பெக்கர் குறித்து கவின் நெகிழ்ச்சி

இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.
காலங்கள் மாறும்...கனவுகள் பலிக்கும்.. ப்ளடி பெக்கர் குறித்து கவின் நெகிழ்ச்சி
Published on

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்து இருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தீபாவளி திருநாளான இன்று இந்த படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படம் குறித்து நடிகர் கவின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் காலங்கள் மாறும்...கனவுகள் பலிக்கும்...! இன்று முதல் உலகமெங்கும்...ப்ளடி பெக்கர் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com