லப்பர் பந்து படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

லப்பர் பந்து படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
லப்பர் பந்து படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
Published on

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் பல வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் லப்பர் பந்து படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "லப்பர் பந்து திரைப்படம் அழகான நடிப்பு திறனால் உருவாக்கப்பட்ட, மகிழ்ச்சி அடைய செய்த சிறப்பான திரைப்படம். கெத்து மற்றும் மைதானத்தில் அவருக்கு உருவாக்கப்பட்ட பில்டு-அப்களை ரசித்தேன். அறிமுக படத்தை சிறப்பாக வழங்கிய தமிழரசன் பச்சமுத்துவுக்கு வாழ்த்துக்கள்."

"படத்தில் நடித்த தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார் புருஷோத்தமன், பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com