கங்குவா முதல் பாடல் - புது போஸ்டர் வெளியீடு

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.
கங்குவா முதல் பாடல் - புது போஸ்டர் வெளியீடு
Published on

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

கங்குவா படத்தின் முதல் பாடல் ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது. இதுதவிர, கங்குவா படத்தின் பேட்ச்ஓர்க் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com