கல்கி 2898 படத்தின் புது அப்டேட் - கவனம் ஈர்க்கும் புஜ்ஜி டீசர் வீடியோ

புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கல்கி 2898 படத்தின் புது அப்டேட் - கவனம் ஈர்க்கும் புஜ்ஜி டீசர் வீடியோ
Published on

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பு கொண்டுள்ளது. வீடியோவில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாசுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com