ஜீவாவின் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது!

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Jolliya Iruntha Oruthan
Published on

16 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக நடிகர் ஜீவா - இயக்குனர் எம். ராஜேஷ் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் தற்போது இணைந்துள்ள திரைப்படம் 'ஜாலியா இருந்த ஒருத்தன்'.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், மிக முக்கியமான புதிய அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது?

'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

நட்சத்திர பட்டாளம்

முன்னணி கதாபாத்திரத்தில் ஜீவா மற்றும் இவானா இருவரும் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பரிதாபங்கள்' சுதாகர், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் (பக்ஸ்), துளசி, ராஜ் அய்யப்பா மற்றும் அப்துல் லீ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், காமெடி மற்றும் எனர்ஜி நிறைந்த ஒரு கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் என்றும் ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் நுட்பக்குழு

இத்திரைப்படத்தின் கதையை எழுதி எம். ராஜேஷ் இயக்க, படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இவர்களுடன் எம். சுகுமார் ஒளிப்பதிவாளராகவும், ஆசிஷ் ஜோசப் படத்தொகுப்பாளராகவும், மற்றும் ஹாசினி பவித்ரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

இத்திரைப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்துள்ளார்.

ரிலீஸ் அப்டேட்

படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து வருகிறது. இத்திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் விநியோக உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளது.

இதனால் படம் மிக பிரம்மாண்டமான முறையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com