

'கக்கனை போல் காமராஜர், காமராஜரை போல் கக்கன்,' என்ற பழமொழிக்கு ஏற்றது போல் கல்வி ஆணுக்கு மட்டுமே அல்ல, பெண்ணுக்கும் கட்டாயம் கல்வி வேண்டும் என்கிற கருத்தை மையமாக கொண்டு கல்விக்கு ஜாதி, மத வேறுபாடு இல்லை என்கிற உலகத்தால் ஓங்கி நிற்கும் கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் "ஜெடூசி."
பெண் என்பவள் ஆசைப்பட்டால் போதாது அந்த ஆசையை நிறைவேற்ற பெற்றோர்களும் அப்பெண்ணிற்கு பக்க பலமாக இருக்க வேண்டும் அப்படி இருக்கும் வகையில் என்னென்ன இடையூறுகள் நேரும் என்பதை தெள்ள தெளிவாக காட்டியிருக்கும் படம் ஜெடூசி.
இன்றைய காலகட்டத்தில் கலாச்சார சீரழிவால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் இப்படத்தின் கதையை எழுதும் பொழுதே இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம் நிச்சயமாக இப்படத்தின் மூலம் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்கிற எண்ணத்தில் திரைக்கதையை படு சுவாரசியமாக உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் படத்தின் உச்சகட்ட காட்சி பரபரப்பின் உச்சம்.
படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் இந்த கதைக்கேற்ற தனது முழு நடிப்பையும் வழங்கி இருப்பது படத்திற்க்கு கூடுதல் சிறப்பு. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.
இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. படத்தில் நாயகனாக ஸ்ரீதரும், நாயகியாக ஸ்வேதா நடித்துள்ளனர். இவர்களுடன் அருவி மதன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், பிளாக் பாண்டி, எழுத்தாளர் பாவா செல்ல துரை, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு விக்னேஸ்வரன் இசையமைக்க, சந்தோஷ் கே பின்னணி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை S.P. அஹமது மேற்கொள்ள, ஒளிப்பதிவு பணிகளை நாகர்ஜுன் V.S மேற்கொண்டுள்ளார்.
நடன இயக்க பணிகளை சுரேஷூம், சண்டை பயிற்சியை அசால்ட்டு மதுரை வழங்கியுள்ளார். இந்தப் படத்தை நட்ராஜ் ஏகாம்பரம் எழுதி, இயக்கியுள்ளார். படத்தை நட்ராஜ் ஏகாம்பரம் மற்றும் விஜயசாந்தி ஸ்ரீதர் இணைந்து தயாரித்துள்ளனர்.