வெற்றிமாறன் இயக்கத்தில் ஜெயம் ரவி - சுவாரசிய தகவல்

ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் ஜெயம் ரவி - சுவாரசிய தகவல்
Published on

ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி பிரதர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டுவருகின்றார்.

அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் கூறியதாவது அவர் இந்தி திரையுலகில் சில கதைகளை கேட்டுள்ளதாகவும். விரைவில் இந்தி திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார். அதைத்தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற ஆசைப்படுகிறேன். அவரும் கண்டிப்பாக நாம் இணந்து பணியாற்றலாம்.  அவர் எழுதிய கதை ஒன்றை நான் இன்னும் சில வாரங்களில் கேட்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் வெற்றி மாறன் இயக்கத்தில் அல்லது வெற்றி மாறன் கதையில் ஜெயம் ரவி நடிக்க வாய்ப்புள்ளதாக இந்த தகவல் அமைந்துள்ளது. இதை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com