அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை - சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த மழை பிடிக்காத மனிதன் படக்குழு

விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை - சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த மழை பிடிக்காத மனிதன்  படக்குழு
Published on

ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை குறித்து இயக்குனர் விஜய் மில்டன் ஒரு புகாரை வைத்தார். படத்தின் தொடக்கத்தில் வரும் இரண்டு நிமிட காட்சி எனக்கே தெரியாமல் தயாரிப்பாளர் சேர்த்துள்ளார். இது என் படத்தின் கதையை கெடுத்துள்ளது. தயவு செய்து படம் பார்ப்பவர்கள் அந்த 1 நிமிட காட்சியை மறந்துவிட்டு பார்க்கும் படி கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்சனை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது, அதாவது தயாரிப்பாளரும், இயக்குனரும் சமரசம்  பேசி படத்தின் தொடக்கத்தில் வந்த 1 நிமிட காட்சியை நீக்கியுள்ளனர். இது குறித்து விஜய் மில்டன் வீடியோ பதிவிட்டுள்ளார், அதில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாது. அனைவருக்கும் நன்றி. இந்த பிரச்சனையை சமரசம் செய்து வைத்த சரத்குமார் சாருக்கு ரொம்ப நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் ஆண்டனி இதனை ஆதரிக்கும் வகையில் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மழை பிடிக்காத மனிதன் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர் , படத்தின் இயக்குனர் திரு. விஜய் மில்டன் வருத்தம் தெரிவிருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை. என்று அப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com