நடிகை சுனைனாவிற்கு நிச்சயம் முடிந்தது - அதிரடி டுவீட்

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நடிகை சுனைனாவிற்கு நிச்சயம் முடிந்தது - அதிரடி டுவீட்
Published on

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com