'லியோ' வெளியாகி 1 வருடம் நிறைவு.. அடுத்த அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ.லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'லியோ' வெளியாகி 1 வருடம் நிறைவு.. அடுத்த அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற லியோ வெளியாகி இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்துள்ளது

இந்த ஓராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, தி கிரானிகல்ஸ் ஆகஃப் லியோ[The Chronicles Of Leo] என்ற தலைப்பில் அப்டேட் ஒன்றை செவன் ஸ்க்ரீன் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் அல்லது BTS எனப்படும் படப்பிடிப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள் குறித்த சிறப்புத் தொகுப்பு வெளியிடப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில தீவிர ரசிகர்கள் இது லியோ 2 படத்துக்கான அப்டேட் ஆக இருக்குமோ என்றும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையே  லியோ படம் ஓராண்டு நிறைவு குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி தெரிவித்து தனது சமூக  வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com