`இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி' - நித்யா மேனனுக்கு தனுஷ் வாழ்த்து

2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியது.சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
`இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி' - நித்யா மேனனுக்கு தனுஷ் வாழ்த்து
Published on

2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது. மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றார். இதுக்குறித்து நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் " திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு . ஷோபனாவாக நித்யா மேனன் தேசிய விருதை வென்றது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி. நடன இயக்குனர் ஜானி, சதீஷ்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். படக்குழுவுக்கு இது ஒரு சிறந்த நாள்" நெறு பதிவிட்டுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளர்கான விருதை ஏ.ஆர் ரகுமான் வென்றார். அதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com