'அமரன்' படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'அமரன்' படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
Published on

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர். கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது. ஓ.டி.டியில் வெளியாகியும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'அமரன்' படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார திரைப்பட விருதுக்கான விழாவில் திரையிட அமரன் படம் தேர்வாகி இருப்பதாக அறிவித்து உள்ளனர். சிறந்த ஊக்கமளிக்கும் 10 படங்கள் பட்டியலில் அமரன் படத்தை இடம்பெறச் செய்து திரையிடுகிறார்கள். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com