ரசவாதி படத்தின் சுவாரஸ்யமான கதைக்களம் - இயக்குனர் சாந்தகுமார்

மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக ’ரசவாதி தி அல்கெமிஸ்ட்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ரசவாதி படத்தின் சுவாரஸ்யமான கதைக்களம் - இயக்குனர் சாந்தகுமார்
Published on

மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்க உள்ளார்.

படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 20 லட்ச பார்வையை ரசவாதி டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் படம் பற்றி இயக்குனர் சாந்தகுமார் கூறியதாவது:-

கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர்{அர்ஜூன் தாஸ்} அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண்ணை சந்திக்கிறார்.

கடந்த கால கஷ்டங்கள் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து நடப்பதுதான் கதை. இந்தப் படத்தை மே 10-ந் தேதி சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன் வெளியிட உள்ளார்.

கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ரசவாதி என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விஷயம். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு என பல்வேறு உணர்வுகளை படம் கடந்து செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார். படத்தின் முதல் பாடலான 'சாரல் சாரல்' வீடியோ பாடல் யூடியூபில் இன்று மாலை 5 மணிக்கு டிவோ மியுசிக் சேனலில் வெளியாகவுள்ளது. ரசவாதி படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com