தாத்தா வந்தாரு கதற விட்டுட்டு போனாரு - ரூ.100 கோடி வசூல்

ஷங்கர் இயக்கத்தில் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியானது.இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
தாத்தா வந்தாரு கதற விட்டுட்டு போனாரு - ரூ.100 கோடி வசூல்
Published on

ஷங்கர் இயக்கத்தில் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான , இப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நேர அளவு காரணமாக சில நாட்களுக்கு முன் குறைக்கப்பட்டது.

படம் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிகளவு வசூல் செய்து இத்திரைப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com