'இந்தியன்-2' படத்தின் 'Come Back Indian' வீடியோ பாடல் நாளை வெளியாகிறது

இந்தியன்-2 படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியானது.இந்தியன்-2 படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்தது.
indian 2 kamalhaasan
Published on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வரும் போதிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'இந்தியன்-2' படத்தின் 'Come Back Indian' வீடியோ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com