இந்தியன் -2 படத்தின் 'காலண்டர்' பாடல் வீடியோ வெளியீடு

சமீபத்தில் வெளியான 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
இந்தியன் -2 படத்தின் 'காலண்டர்' பாடல் வீடியோ வெளியீடு
Published on

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் காலண்டர் பாடலின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இதனை படத்தின் நிறுவருமான லைகா வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com